ஆன்மீக நாட்டமில்லாத நடிகர் கமலஹாசனின் மகளுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்திருக்கிறது.
நடித்த படங்கள் சரியாக போகாத்தால் வருத்தப்பட்ட ஸ்ருதி, இசையமைப்பாளராகவே இருந்துவிடலாமோ? என்று எண்ணியிருந்த வேளை, திருப்பதிக்கு சென்று வந்தால், துன்பம் அகலும். சுக அனுபவம் கிட்டும் என்று சொன்ன தாயின் சொல்லைத் தட்டாமல் சென்று வந்ததன் பலன்..
3 (மூனு) படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்தன. அவர் இந்திப் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. வெற்றிமாறன் படம்தான் அடுத்து என செய்திகள் வந்தன.
இந்த நிலையில், சத்தமின்றி அவரது அடுத்த படம் தொடங்கிவிட்டது. இந்தப் படத்துக்கு மரியான் என்று தலைப்பிட்டுள்ளனர்.
பரத்பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு A.R. Rahman இசையமைக்கிறார். தனுஷ் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை தருவது இது முதல்முறை. ஏற்கெனவே இரண்டு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் ரஹ்மான்.
வணக்கம் நண்பர்களே..! மீண்டும் உங்கள் குள்ளு கோகுல்..! நாம எதைச் சொன்னாலும் நாசூக்கா சொன்னா அது எல்லாரோட மனசுலயும் ஈஷியா பதிஞ்சுடும். அதே மெத்தேட்தான் இந்த படத்துக்கும். பாலாஜி சக்திவேலோட அருமையான படைப்புதான் வழக்கு எண் 18/9 .
சற்குணம் இயக்கிய வாகை சூட வா படத்திற்கு 7 விருதுகள் கிடைத்திருக்கிறது.3 வது நார்வே திரைப்பட விழாவில் இந்த விருதுகளைப் பெற்றது இப்படம். உலகளவில் நடத்தப்படும் ஒரே திருவிழாவான நார்வே திரைப்பட விழா கடந்த 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடந்து வந்தது.
விழாவில் 10 படங்களும்(Movies), 20 குறும்படங்களும்(short films) தேர்வாகி லொரன்ஸ்கூவில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. இதில் 20 குறும்படங்களில் 5 குறும்படங்களுக்கு விருதுகள் 28ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விழாவின் இறுதிநாளில் பெரிய படங்களுக்கு விருதுகளும், வண்ணமையான கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்த விழாவை காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். ரசிகர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில், தமிழ் சினிமாவுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.
கோவை செல்வபுரத்தை சேர்ந்த சதாசிவம் என்பவரை ஒரு பெரியவர் வழிமறித்து, பக்கத்தில் இருந்த ஒரு புற்றை காட்டி, ``இதில் லிங்கமும், தண்டலமும் இருக்கிறது. அதை எடுத்து வழிபடுங்கள்'' என்று கூறி மறைந்து விட்டார். அந்த பெரியவர் சொன்னபடி கோவில் கட்டி, லிங்கத்தையும், தண்டலத்தையும் அந்த பகுதி மக்கள் பல வருடங்களாக வழிபட்டு வருகிறார்கள்.
இந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து, `தென் கைலாயம்' என்ற படம் தயாராகிறது. புதுமுகங்கள் அகிலன்-சப்னாவுடன் மீராகிருஷ்ணன், சிங்கம்புலி, ஜெயசூர்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
பட அதிபர் ஏ.எம். ரத்னத்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா டைரக்டு செய்திருப்பதுடன், கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம், 'ஊலல்லா'. இந்தப் படத்தில், ஜோதி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த திவ்யா பண்டாரி நடித்திருக்கிறார்.
அப்பாவாக தலைவாசல் விஜய்யும், எத்தனை துன்பம் வந்தாலும், சிரித்துக்கொண்டே அரவணைக்கும் அம்மாவாக ராணியும் நடித்துள்ளனர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, பட்டி மன்ற ராஜா, பக்கோடா பாண்டிய ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு வசனம் எழுதியிருக்கும் சேகர் பிரசாத், ஜோதி கிருஷ்ணாவின் நண்பராக ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ். ராம்பாபு, கலைச்செல்வன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி டைரக்டர்-கதாநாயகன் ஜோதி கிருஷ்ணா கூறியது. "யதார்த்த வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லும் படம் இது. ஒரு 'கேர்ள் ப்ரெண்ட் கூட கிடைக்காத மக்கு மாணவரனாக நான் நடித்திருக்கிறேன். எனக்கும் ஒரு காதலி கிடைக்கிறாள். அவளையாவது தக்க வைத்துக்கொண்டேனா, இல்லையா? என்பதுதான் கதை. இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் திவ்யா பண்டாரி, என் முந்தைய அறிமுகங்களான திரிஷா, ஸ்ரேயா, இலியானா ஆகியோரைப்போல் பிரபலம் ஆவார்."
அரசியல் சதியால் சிக்கி தன் வாழ்வை தொலைக்கும் இளைஞனின் கதை
ஒரு படம் ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காமல் இருக்குமானால் அந்த படம் நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும். அந்த வகையில் இந்த பச்சை என்கிற காத்து திரைப்படமும். படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களுமே மனதில் நிற்கிறது.நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. புதுமுகங்களைக் கொண்டு அதுவும் மேக்கப் எதுவும் இல்லாமல் நடிக்க வைத்து ஒரு வெற்றிப்படத்தை கொண்டுவந்திருக்கிறார் டைரக்டர்.
சமீப படங்களில் வருவதைப் போல போதை, நட்பு வட்டம் என தான்தோன்றித்தனமாக திரிபவன் பச்சை. உள்ளூர் அரசியல்வாதியிடம் சேர்ந்து கட்சி வேலை செய்கிறான். உள்ளூர் அரசியல்வாதி என்றால் சொல்லவும் வேண்டுமா? தனக்கு ஏதாவது பிரச்னையை கொடுப்பதற்கு முன்பே கூட இருந்து குழிபறிக்கும் வேலைதான் அரசியல் வாதி வேலை. அதை அப்படியே கச்சிதமாக செய்கிறார் உள்ளூர் அரசியல் வாதி. ஒரு கட்டத்தில் அரசியல்வாதிக்கும், பச்சைக்கும் மோதல் வெடிக்கிறது. விளைவு? பச்சையை ஆள் வைத்து வெட்டி வீசுகிறான் உள்ளூர் அரசியல்வாதி.
கதாநாயகன் முடிந்தால் கதையே முடிந்துவிடும் அல்லவா? அதனாலேயே அநேக படங்களில் செத்துவிட்டதாக காட்டும் கதாநாயகன் அடுத்த காட்சியில் உயிர்பிழைத்து வருவதாக காட்டுவார்கள். அப்போதுதான் நமக்கும் மனசுக்கு சந்தோசமா இருக்கும். அதே மாதிரி நம்ம பச்சையும் உயிர்பிழைத்து வந்து அரசியல் வாதியையை வெட்டி வீழ்த்துகிறான்.
அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே, கோவில்பட்டி வீரலட்சுமி, சிட்டிசன், ஆயிரத்தில் ஒருவன், வாகை சூடவா, அரவான் உள்பட பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர், நம்பிராஜன். இவர் முதன்முறையாக கதை-திரைக்கதை-வசனம்(Story-Screenplay-Dialogues) எழுதி ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். அந்தப் படத்தின் பெயர் 'சங்கராபுரம்'
இதில், 'தூத்துக்குடி' பட புகழ் ஹரிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகங்கள் சஹானா, குஷ்பு, ஆதிரா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கலாபவன் மணி,செந்தில், தம்பி ராமயா, வையாபுரி, நெல்லை சிவா, ஒய்.எஸ்.டி. சேகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
என்னதான் சொல்லுங்க என்னவிட யோக்யன் எவனும் இல்லை.. அப்படின்னுதான் எல்லாரும் சொல்லிக்கிறாங்க.. அடுத்தவங்களைப் பத்தி மட்டுமே தப்பா பேசுற நாம ஒரு நாளாவது நம்மளப்பத்தி யோசிச்சிருக்கோமா? நம்மளோட சரக்கு என்ன? நம்மளோட தகுதி என்ன அப்படின்னு யோசிச்சுப் பார்த்தாத்தான் தெரியும் நம்மோளட 'கப்'பு என்னன்னு?? இல்லையா.. ஆனாலு நான் யோக்யன்தான்பா... இந்த குள்ளு கோகுல் மனசுல எப்பவுமே ஒரு நல்லவன் இருந்துட்டே இருப்பான்... அதை உங்களுக்கு இப்ப சொல்லிக்கிறேன்..
ஹி..ஹி... மேட்டருக்கு வந்துட்டேன்... ஆர்யா வீடல நயன்சுக்கு என்ன வேலை? ன்னு தலைப்பைப் பார்த்து ஓடியாந்திட்டீங்களா? பாருங்க.. இதில ஒன்னும் வில்லங்கம் இல்லை.. ஆர்யா புது வீட்டு மனை வாங்கி புதுமனை புகுவிழா கொண்டாடி இருக்கிறார். அந்த விழாவுல.. நம்ம குடும்பத்துக் குத்துவிளக்கு.. நயன்தாரா வந்து குத்து விளக்கேத்தி குடும்பம் விளக்கட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல செஞ்சிருக்கார். அதனோட செய்திதான் கீழ இருக்கு.. ஒன்னும் பயப்படாம படிச்சுட்டுப் போங்க..
கோலிவுட் உலகத்தில பெரும்பிரச்னையாக பேசப்படுவது இந்த மாதிரியான விஷயங்கள்தான். எந்த மாதிரியான விஷயங்கள்னு கேட்கறீங்களா? அதாங்க அவர் கூட இவருக்கு தொடர்பு, இவர் கூட அவருக்குத் தொடர்புன்னு' அடிக்கடி பேசிக்குவாங்க.
இன்னும் சொல்லப்போனால் கொஞ்சநாளா இருந்து வந்த நயன்தாரா - பிரபு தேவா பிரச்னைதான் ஹைலைட். அரசல் புரசலா பேசினதை நிஜமாக்கி, நாடுமுழுசும் நாறடிச்சுட்டாங்க.. இருந்தாலும் சினிமாக்காரங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா! விடு ஜூட்.. அவங்கவங்க மறுபடியும் தங்களோட தொழில்களைத் தொடங்கப் போயிட்டாங்க..
வணக்கம் இது குள்ளு கோகுல். எனக்கு இன்னொரு பேரும் உண்டுங்க.. அது இதற்கு முன்பு இந்த தளத்திற்கு வந்தங்களுக்குத் தெரியும். இருந்தாலும் புதுசா வந்திருக்கிற உங்களுக்குத் தெரிய வேணாமா?
சொல்லட்டுமா?
ஒன்.
டூ,
த்ரீ...
தி கிரேட் ஜொள்ளு கோகுல்.. எல்லோரும் ஒரு முறை ஜோரா கை தட்டுங்கப் பார்க்கலாம். ஹா.. ஹா..
இது ஒரு டைட்டிலாம். ஒரு நெம்பரையே படத்தோட பேருன்னு சொல்லி அதையும் பேமஸ் ஆக்கிட்டாங்க.
ஜொள்ளு கோகுல்னு பேரை வச்சிகிட்டு டைட்டிலப்பத்தி எழுத உனக்கென்ன ரைட்ஸ் இருக்குன்னு கேட்கிறீங்களா? அதுவும் வாஸ்தவம்தான்.
இந்த மனம் கொத்திப் பறவை படத்தைப் பற்றி ஒரு கொசுறு செய்தியைத் தந்திடறேன். இந்த படத்தின் கதாநாயகன் நம்ம சின்னத்திரையில் நடித்தவர். அனைவருக்கும் ஏற்கனவே அறிமுகமானவர்தான். பேரு சிவகார்த்திகேயன்.
இந்த போட்டோவைப் பாருங்க உங்களுக்குக்கேத் தெரியும்.
இந்த படத்தோட டைரக்டர் எழில்.
அப்புறம் இந்த காமெடியைப் பாருங்களேன்..இதுல விவேக் பண்ணுற அட்டூழியத்தை..!!! வித்தியாசமான கெட்டப்பில், தன்னுடைய காமெடி குழுவோட இவர் பண்ணியிருக்கிற அட்டகாசத்தைப் பார்த்து சிரிக்கலாம்.. சில வேளைல கொஞ்சம் அதிகமா இருக்கிறமாதிரி தோணும். இதுல வர்ற பின்னணி இசை காமெடிக்கேத்த மாதிரி செட்டாகியிருக்கு. உண்மையிலேயே பார்த்து ரசிக்கலாம். என்ன அந்தக் கால தெரிக்கூத்தில ப்பூன் (Baffon) செய்றமாதிரியான ஒரு காமெடி. ஆனாலும்....காட்சியில வர்ற கதாநாயகியை ரசிக்கலாம்.. என்ன அழகு.. என்ன அழகு..!!! சூப்பர் போங்க...!!!!
விவேக் பண்ணுற காமெடிக்கும் மேல இந்த பதிவுல எழுத ஒன்னும் இல்லை..
நாளைக்கு மறுபடியும் ஒரு வித்தியாசமான பதிவோட சந்திக்கிறேன்...
எப்பவும் போல உங்கள் குள்ளு கோகுல் 'ஜொல்லு' கோகுல்...!!! வரட்டுங்களா???!!!
ஒரு கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, 'பூ பூக்கும் ஓசை' என்ற படம் தயாராகிறது. புதுமுகம் நிவாஸ் கதாயாயகனாக நடிக்கிறார்.
புதுமுகம் நம்ருதா இப்படத்தில் அறிமுகமாகிறார். பெங்களூர் அழகியான இவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
சும்மா ஒரு கிளு கிளுப்புக்காக..
நடிகர் ஆனந்த் பாபு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
இப்படத்தில் கதை, டைரக்ஷன் இரண்டையும் பார்த்துக்கொள்ளும் வேதாஸ் , படத்தின் கதாநாயகின் தந்தையாக முப்பரிமாணம் எடுத்துள்ளார்.
பூ பூக்கும் ஓசை பட விழாவில் நடிகை நம்ருதா
எஸ் பாலா அவர்கள் ஒளிப்பதிவு. கே.ஏ. இசை: ஸங்கீத் , திரைக்கதை: பெருமாள் நெர்.வேதாஸ் சி. குருசாமி, டி. முத்துக்கருப்பன் ஆகிய இருவரும் தயாரிக்க, இணை தயாரிப்பு டி. கோவிந்தராஜ்.
படப்படிப்பு சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் நடைபெற இருக்கிறது. பாடல் காட்சிகளை மைசூர்(MYSORE), பெல்காம்(BELCOM), காசர்கோடு கூர்க் மலைப்பிரதேசம்(COORG MOUNTAIN) ஆகிய இடங்களில் படமாக்குகிறார்கள்.
காதலை தன் உயிராக - மானப் பிரச்னையாக கருதும் இளம்பெண். அதே காதலை விளையாட்டாக கருதும் இளைஞர். இந்த காதலுக்கு பெண்ணின் தந்தையே வில்லன் என மூன்று பேர்களை சுற்றி வருகிறது கதை..
படம் வெளிவந்தபிறகு இப்படத்தைப் பற்றி விமர்சனத்தையும் எதிர்பார்க்கலாம்..!!!
இப்படிக்கு,
உங்கள் ஜொள்ளு "குள்ளு" கோகுல்.
என்ன யாரது குள்ளு கோகுல்னு கேட்கறீங்களா? கிளிக் பண்ணிப் பாருங்க...
தமிழ்பட உலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான அமலாபால், கேரளாவில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தாயார் போலீஸ் கான்ஸ்டபிளாக(Police Constable) பணிபுரிந்தவர்.
மலையாள பட அதிபர் ஒருவர் மீது நடிகை ஸ்ரேயா தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறார். பட அதிபர் மீது வழக்கு தொடரவும் ஸ்ரேயா முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
மம்முட்டி, பிருதிவிராஜ், ஸ்ரேயா ஆகியோர் நடித்து, சமீபத்தில் திரைக்கு வந்த மலையாள படம் "போக்கிரி ராஜா" ரியாஸ்கான், சரண்ராஜ், காதல் தண்டபாணி, நெடுமுடி வேணு ஆகியோரும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். கதைப்படி, மம்முட்டியும், பிருதிவிராஜூம் அண்ணன்-தம்பி. பிருதிவிராஜூம்,ஸ்ரேயாவும் காதலர்கள். இவர்களின் காதலை சேர்த்து வைக்க மம்முட்டி நடத்தும் போராட்டம்தான் கதை.